தனி விமானத்தில் கேரளா பறந்துள்ள காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன்.
ஏப்ரல் 14ம் தேதி மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.தங்கமே, தங்கமே என காதலியை செல்லமாக அழைக்கும் விக்னேஷ் சிவன்.நயன் - விக்னேஷ் ஜோடி எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு.விமானத்தில் இருந்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.விமான பயணத்தின் போது எடுத்த வீடியோவையும், புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவர்களின் பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் உள்ளிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும்.இணையத்தில் பதிவெற்றம் செய்துள்ள படங்களை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா வெகு ஸ்லிம்மாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.அதே போல் கடந்தாண்டும் அவர்கள் தனி விமானத்தில் கேரளா சென்று விஷு கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.