FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - புகைப்படங்கள்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - புகைப்படங்கள்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தந்த முதல்வர் விஜய்.
பகிர்:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில், 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக த.வெ.க. அறிவித்த நிலையில், இந்த திட்டத்தை, தமிழக முதல்வர் விஜய் மதுரையில் இன்று தொடங்கி வைத்தார்.
முதல் குழந்தையாக அழகுமலை பகுதியைச் சேர்ந்த முத்து யாழினி என்ற பெண் குழந்தைக்கு தங்க மோதிரத்தை முதல்வர் விஜய் அணிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்து கொண்ட முதல்வர் விஜய், மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து திட்டத்தை தொடக்கி வைத்தார்.
ஜூன் 22 ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ள நிலையில் இரட்டை குழந்தைகள் பிறந்தால் இரண்டு மோதிரங்கள் வழங்கப்படும்.
மாவட்டங்களில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் 22 காரட் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது
மோதிரத்தில் தமிழ் நாடு அரசின் சின்னம், ஹால்மார்க் முத்திரை மற்றும் வரிசை எண் ஆகியவை இருக்கும்.
திட்டத்தின் கீழ் பயன்பெற, கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்திருக்க வேண்டும், அதே வேளையில், தாய்மார்கள் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments