ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் 150 கிராம் எடை உடையது. அவரை விதை வடிவத்தில் உள்ள சிறுநீரகமானது உடலின் பின்பகுதியில் அமைந்துள்ளது. ரத்தத்தை பெறுவதும் வெளி அனுப்புவதும் இதன் முக்கியப் பணிகளாகும்.
சீறுநீரகத்தின் செயல்பாடுகள்
- உடலில் உற்பத்தி ஆகும் நச்சுப் பொருட்களை பிரித்தல்
- நீர்நிலை சமப்படுத்துதல்
- உப்பைச் சமப்படுத்துதல்
- அமிலத்தன்மையை சமம்படுத்துதல்
- ரத்தக் கொதிப்பை சீர் செய்தல்
சிறுநீரகத்தில் சுரக்கும் ஒருவித ஹார்மோன் ரத்த உற்பத்திக்கு காரணமாகிறது.
வைட்டமின் டியின் உதவியால் எலும்புகளை உறுதிப்படுத்துகிறது
சிறுநீரகக் கோளாறின் அறிகுறிகள்
- முகத்தில் வீக்கம்
- சிறுநீர்க் குறைவு
- கால்களில் வீக்கம்
- சிறுநீரில் ரத்தம்
- சிறுநீர் கழிப்பதில் சிரமம்
- பசியின்மை
- வாந்தி
- உடல் அழற்சி
- தூக்கமின்மை
- அரிப்பு
- சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்
- மேற்சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் சில உங்களுக்கு இருக்குமாயின் உடனடியாக மருத்துவரை அணுகி முதலில் ஆலோசனைகளைப் பெறுங்கள்.
- ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை மருத்துவரின் பரிந்துரையின் படி மேற்கொள்ளவும்.
- இதற்கான பரிசோதனைகள் சுலபமானது. குறைந்த செலவில் செய்து கொள்ள முடியும்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அதிக ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும் இது வரும் வாய்ப்பு அதிகமுள்ளது.
- சீரான உணவு முறை சிறுநீரகப் பராமரிக்கு அனுகூலமானதாகும்
- புகை பிடிப்பதை நிறுத்தவும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- சுய மருத்துவம் ஒருபோதும் செய்யாதீர்கள். குறிப்பாக வலி நிவாரணிகளை உட்கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள்.
- உணவில் உப்பை குறைத்து சாப்பிடுங்கள்.
- தினமும் நடப்பதோ அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- நிறைய தண்ணீர் குடியுங்கள்.
- ரத்த கொதிப்பு 120 / 180 இருக்க வேண்டும்
- வெறும் வயிற்றில் ரத்தத்தில் சர்க்கரை 110 mg/dlக்கு குறைவாக இருக்க வேண்டும்
- ரத்தத்தில் கிரியாடினின் அளவு 0.6 - 1.2 mg/dl இருக்க வேண்டும்.
மருத்துவர் என்ன செய்வார்?
- உங்களுக்கு சிறுநீரக கோளாறு வர வாய்ப்பு உள்ளதா என்று கூறுவார்.
- ஆரம்ப நிலையில் நோயை கண்டுபிடிப்பார்.
- சிறுநீரகங்களைப் பாதுகாக்க மருந்துகளை அளிப்பார்.
- நோயை தடுக்கவும் பல நாட்களுக்கு தவிர்க்கவும் ஆலோசனை அளிப்பார்கள்.
சிறுநீரகம் பற்றி மேலும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும், இலவசமாக கவுன்சிலிங் மற்றும் ஆரம்ப கட்ட பரிசோதனைகளை செய்து கொள்ளவும் அம்பத்தூரில் இயங்கிவரும் டாங்கர் விழிப்புணர்வு அமைப்பை அணுகலாம். தொலைபேசி 044 - 2625 0727 / 4231 5115
நன்றி - திருமதி ராஜலட்சுமி ரவி, டாங்கர் அமைப்பின் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புச் செயல்பாடுகளின் தலைவர்.