சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் சீராக்கும் கீரைச் சாறு
கீரையை சுத்தம் செய்யவும். மஞ்சள், சீரகம், மிளகு ஆகியவற்றைச் சேர்துது கீரையுடன் அரைத்து சாற்றை வடிகட்டிக் கொள்ளவும்.
கீரை : பருப்புக் கீரை சூப்
தேவையான பொருட்கள் :
பருப்புக் கீரை - 2 கட்டு
மிளகு ,சீரகம் - ஒரு ஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு துண்டு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
மல்லி, புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு
உப்பு, மஞ்சள், எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை : கீரையை சுத்தம் செய்யவும். மஞ்சள், சீரகம், மிளகு ஆகியவற்றைச் சேர்துது கீரையுடன் அரைத்து சாற்றை வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி அதனுடன் வடிகட்டி வைத்துள்ள கீரைச் சாற்றையும் சேர்த்து தேவைக்கு கொஞ்சம் நீர்சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பின்பு கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து இறக்கி வைத்துக் கொண்டு தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உண்டாகும் சிக்கல்கள் சீராகும்.
Advertisement
Advertisement
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.