செய்திகள்

தாம்பத்திய உறவில்  ஆர்வம் அதிகரிக்கவும் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிக்கவும் இது சிறந்த வழி!

வைட்டமின் B , C , கால்சியம் , பொட்டாசியம்  , இரும்புச் சத்து  , பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து

கோவை பாலா

சத்துக்கள் : வைட்டமின் B, C, கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ்  மற்றும் நார்ச்சத்து

தீர்வு

வெண்பூசணி தோலோடு(100 கிராம்)
பாதாம் பருப்பு (20 கிராம்)
மிளகு (5 கிராம்)

செய்முறை : வெண்பூசணிக் காயை நன்றாக கழுவி தோலோடு நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் மேற்கூறிய பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு தினமும் அதிகாலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து தாம்பத்தியத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

கொடிப் பசலைக் கீரைச் சாறு (200 மி.லி) எடுத்து அவற்றில் பாதாம் பருப்பு (100 கிராம்) ஊற வைத்து பின்பு உலர்த்திப் பொடியாக்கி  வைத்துக் கொண்டு தினமும் பசும் பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டு வந்தால் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பொதுவாக அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் ஓரணியில் திரள வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

SCROLL FOR NEXT