வலிமையான உடலைப் பெற உதவும் சூரணம்
வலிமையான உடலைப் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் கசகசா பாதாம் பருப்புச் சூரணத்தைப் பயன்படுத்திப் பலனடையுங்கள்.
வலிமையான உடலைப் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் கசகசா பாதாம் பருப்புச் சூரணத்தைப் பயன்படுத்திப் பலனடையுங்கள்.
தேவையான பொருள்கள்
கசகசா - 100 கிராம்
Advertisement
Advertisement
முந்திரிப் பருப்பு - 100 கிராம்
பாதாம் பருப்பு - 100 கிராம்
செய்முறை
முதலில் கசகசா, முந்திரிப் பருப்பு மற்றும் பாதாம் பருப்பு இவை மூன்றையும் எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்திய பின்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அரைத்துப் பொடி செய்து கொள்ளவும்.
பயன்கள்
இந்த சூரணம் உடலை வலுப்பெறுவதற்கு உதவும் அருமருந்தாகும். வலிமையான உடலைப் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து ஐந்து கிராம் அளவு எடுத்து காலை மற்றும் மாலை என இருவேளையும் வெறும் வாயில் போட்டு சப்பி சாப்பிடலாம் அல்லது சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.
நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.