மனநல மருத்துவம்

வீக் எண்ட் ஜோக்ஸ் கொஞ்சம் சிரிச்சிடுங்க!

ஏன் சிஸ்டர் எடை மெஷினில் இருமுறை எடை பார்த்தீங்களே... ஏன்

தினமணி

"ஏன் சிஸ்டர் எடை மெஷினில் இருமுறை எடை பார்த்தீங்களே... ஏன்?''
"பர்ஸுடன் ஒருமுறை பர்ஸில்லாமல் ஒருமுறை... பர்ஸ் என்ன கனம்ன்னு தெரிஞ்சுக்கத்தான்''
ஆர்.யோகமித்ரா, சென்னை-73.

**

"என்ன மச்சான் நல்லா இருக்கிறியா? ரொம்ப நாளா போனையே காணோம்''
"சத்தியமா நான் போனை எடுக்கலைடா... நல்லா தேடிப் பார்''
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

**

"மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருக்கவே கூடாது''
"சரிதான்... நம்ம வீடு தவிர''
கு.அருணாசலம், தென்காசி.

**

"ஆடு, மாடுகளுக்கு இருக்கிற மரியாதை கூட நமக்கு இல்லைன்னு எப்படிச் சொல்றே?''
"அதுகளுக்கு லோன் தர்றாங்க... நமக்குத் தர்றாங்களா?''
அ.செல்வகுமார், சென்னை-19.

**

"தலைவரே என்ன நம்ம கட்சிக்காரங்க ஜாதகத்தை பார்க்கிறீங்க?'' 
"யார் யாரெல்லாம் நம் கட்சியை விட்டு போகப் போறாங்கன்னு தெரிஞ்ச்சிக்கத்தான்''
மணிகண்ட பிரபு, திருப்பூர்

**

"பால்காரரே இனிமேல் நீயே பால்ல தண்ணீர்  ஊற்றிக் கொடுப்பா''
"தண்ணீர் ஊத்தின பால்ன்னா லிட்டருக்கு இருபது ரூபா அதிகம்மா''

**

"அப்பா பரத் நவீனமா சாபம் விடுறான்''
"எப்படி?''
"உன் பாஸ்வேர்டெல்லாம் மறந்து போகன்னுதான்'' 

**

"மாப்பிள்ளை என்ன வேலைல இருக்காரு?''
" பத்து வாட்ஸ் அப் குரூப்புக்கு அட்மினா இருக்காரு''
பொ.பாலாஜி, அண்ணாமலை நகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT