FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அனைத்து வன்முறைகளுக்கும் ஆண்களே காரணம்: மேனகா காந்தி குற்றச்சாட்டு

நாட்டில் நடைபெறும் அனைத்து வன்முறைகளுக்கும் ஆண்களே காரணம் என்று மத்திய மகளிர், குழந்தைகள்

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

நாட்டில் நடைபெறும் அனைத்து வன்முறைகளுக்கும் ஆண்களே காரணம் என்று மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளதால், பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
 இதுகுறித்து முகநூல் (ஃபேஸ்புக்) சமூக வலைதளம் மூலம் திங்கள்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் மேலும் கூறியதாவது:
 பாலினப் பாகுபாட்டை உருவாக்குவதில் ஆண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
 மாணவிகளை மரியாதையாக நடத்தி, அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கும் வகையில் புதிய திட்டத்தை பள்ளிகளில் அமல்படுத்த மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
 ஆண்டுதோறும் ஒவ்வொரு வகுப்பிலும் இந்த பரிசுகள் வழங்கப்படும். மேலும், தைரியமும், சிறந்த நடத்தையும் கொண்ட மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
 இந்தியாவில் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் ஒரு பள்ளி தேவைப்படுகிறது. உலகத்தில் மிகப்பெரிய பள்ளி முறை நம் நாட்டில் உள்ளது.
 நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்.
 பெண்கள் மீதான வன்முறைகள், தனிப்பட்ட வழக்குகள் ஆகியவற்றுக்கு நமது ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருவதால், நமது நாட்டில் பெண்களுக்கு மரியாதை தரப்படுவதில்லை என்ற எண்ணம் பிற நாடுகள் மத்தியில் எழுகிறது. இதனால் நமது நாட்டுக்கு உலக அரங்கில் பிரச்னை ஏற்படுகிறது.
 அதே நேரத்தில், ஊடகச் செய்திகளால் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் உருவாகுவதோடு, பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுகிறது என்று அந்தக் கலந்துரையாடலில் மேனகா காந்தி கூறினார்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments