தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள்: முதலிடத்தில் குஜராத்
இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்குவதற்கும், வர்த்தகம் மேற்கொள்வதற்கும் உகந்த மாநிலங்களில் முதல் இடத்தில்
இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்குவதற்கும், வர்த்தகம் மேற்கொள்வதற்கும் உகந்த மாநிலங்களில் முதல் இடத்தில் குஜராத் உள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொழில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலங்களை தரவரிசைப்படுத்தும் வகையிலான ஆய்வை மேற்கொள்ளுமாறு உலக வங்கிக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், அந்த ஆய்வை உலக வங்கி மேற்கொண்டது.
அந்த ஆய்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
அதன்படி, தொழில் தொடங்க சாதகமான சூழல் உள்ள மாநிலங்களில் குஜராத் முதல் இடத்தில் உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக ஆந்திரம் இரண்டாவது இடத்திலும், ஜார்க்கண்ட் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஸா, மகாராஷ்டிரம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன.
மேற்கு வங்கத்துக்கு 11-ஆவது இடமும், தமிழகத்துக்கு 12-ஆவது இடமும் கிடைத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.