FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: குறைவான தண்டனைக்கு கோரிக்கை

மும்பை புறநகர் ரயில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகள் 12 பேரும், தங்களது தண்டனையைக் குறைத்து வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரினர்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

மும்பை புறநகர் ரயில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகள் 12 பேரும், தங்களது தண்டனையைக் குறைத்து வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரினர்.
 கடந்த 2006-ஆம் ஆண்டு மும்பையின் புறநகர் ரயில்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 188 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிமி பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
 மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், விசாரணை நிறைவடைந்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் 12 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி யதின் டி சிண்டே தீர்ப்பளித்தார்.
 இந்நிலையில், அவர்களுக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை மீதான வாதம் திங்கள்கிழமை தொடங்கியது. அவர்கள் நீதிபதி முன் தனித்தனியே ஆஜராகினர். தங்களது குடும்பச் சூழ்நிலைகளையும், ஏற்கெனவே சிறையில் கழித்த காலங்களையும் கருத்தில் கொண்டு, தண்டனையைக் குறைத்து வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். குற்றவாளிகளின் வழக்குரைஞர்கள் தரப்பு வாதங்களும், அரசுத் தரப்பு வாதங்களும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments