அலாகாபாதில் மேதா பட்கர் ஆதரவாளர்களுடன் கைது
உத்தரப் பிரதேச மாநிலத்தில், அலாகாபாத் மாவட்டத்தில் உள்ள கச்ரி கிராமத்துக்குச் செல்ல முயன்ற சமூக ஆர்வலர் மேதா பட்கர், தனது ஆதரவாளர்களுடன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், அலாகாபாத் மாவட்டத்தில் உள்ள கச்ரி கிராமத்துக்குச் செல்ல முயன்ற சமூக ஆர்வலர் மேதா பட்கர், தனது ஆதரவாளர்களுடன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கச்ரி கிராமத்தில் அனல் மின் திட்டத்துக்காக, அரசு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது, விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து, பதற்றமாகக் காணப்படும் அந்த கிராமத்துக்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி செல்ல முயன்றதாக, மேதா பட்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ஆசுதோஷ் மிஸ்ரா கூறியதாவது:
அலாகாபாத் பல்கலைக்கழக வளாகம் அருகே, சனிக்கிழமை காலை கூடியிருந்த மேதா பட்கர் உள்பட 10 பேரை கைது செய்தோம். அவர்கள் அனைவரும், விவசாயிகளின் போராட்டத்தால் பதற்றத்துடன் காணப்படும் கச்ரி கிராமத்துக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்த முயன்றதாக, மேதா பட்கர் உள்ளிட்டோர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அவர்கள் அனுமதி கோரியிருந்தாலும், கொடுத்திருக்க முடியாது என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.