"ஆஸ்ட்ரோசாட்' செயற்கைக்கோள் கவுன்ட் டவுன் தொடக்கம்
வானியல் ஆய்வுக்கான "ஆஸ்ட்ரோசாட்' உள்பட 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ள பிஎஸ்எல்வி-சி30 ராக்கெட்டுக்கான 50 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை தொடங்கியது.
வானியல் ஆய்வுக்கான "ஆஸ்ட்ரோசாட்' உள்பட 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ள பிஎஸ்எல்வி-சி30 ராக்கெட்டுக்கான 50 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ராக்கெட் செலுத்துவதற்கான வாரியம் (எல்.ஏ.பி.) இந்த ராக்கெட்டைச் செலுத்த சனிக்கிழமை அனுமதி வழங்கியது. இதையடுத்து, கவுன்ட் டவுன் நடவடிக்கைகள் சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில், இந்த ராக்கெட்டின் நான்காவது நிலையில் எரிபொருளை நிரப்பும் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.
Advertisement
Advertisement
பிஎஸ்எல்வி-சி30 ராக்கெட் மூலம் இந்த ராக்கெட் திங்கள்கிழமை (செப்டம்பர் 28) காலை 10 மணிக்கு ஏவப்பட உள்ளது. பூமியிலிருந்து 650 கி.மீ. உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் "ஆஸ்ட்ரோசாட்' ஏவப்படும்.
ஆஸ்ட்ரோசாட்: சந்திரயான்-1, மங்கள்யான் விண்வெளி திட்டங்களின் வெற்றியைத் தொடர்ந்து, முழுவதும் வானியல் ஆய்வுக்கான "ஆஸ்ட்ரோசாட்' (அநபதஞநஅப) செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவுகிறது.
இதிலுள்ள கருவிகள் விண்வெளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள், குறைந்த- அதிக ஆற்றல் வாய்ந்த எக்ஸ்ரே கதிர்கள் உள்ளிட்டவற்றை பல்வேறு அலைவரிசைகளில் ஆய்வு செய்யும். இதுவரை பிற நாடுகள் அனுப்பியுள்ள வானியல் ஆய்வு செயற்கைக்கோள்கள், குறைந்த அலைவரிசைகளில் மட்டுமே விண்வெளியைக் கண்காணிக்கும் திறன் படைத்தவை.
இந்த செயற்கைக்கோளின் எடை 1,513 கி.கி. ஆகும். இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள். இதில் அல்ட்ரா-வொய்லட் இமேஜிங் டெலஸ்கோப், சாஃப்ட் எக்ஸ்ரே டெலஸ்கோப் உள்ளிட்ட 5 கருவிகள் உள்ளன. சூரியக் குடும்பத்துக்கு அடுத்துள்ள பிற கோள்களை அறிந்துகொள்ளவும், எக்ஸ்ரே கதிர்களின் மூலத்தை அறிந்துகொள்ளவும் இந்தச் செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.
6 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்கள்: இத்துடன் இந்தோனேசியாவின் லெபான்-ஏ2 (76 கி.கி.), கனடாவின் என்எல்எஸ்-14 (14 கி.கி.), அமெரிக்காவின் 4 லெமூர் வகை செயற்கைக்கோள்கள் (28 கி.கி.) ஆகிய செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி-சி30 ராக்கெட்டில் அனுப்பப்பட உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.