எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்த அமைச்சர்
ஆந்திரப் பிரதேச மாநில அமைச்சர் தேவிநேனி உமாமகேஸ்வர ராவ், எரிவாயு உருளைக்கான மானியத்தை சனிக்கிழமை விட்டுக் கொடுத்தார்.
ஆந்திரப் பிரதேச மாநில அமைச்சர் தேவிநேனி உமாமகேஸ்வர ராவ், எரிவாயு உருளைக்கான மானியத்தை சனிக்கிழமை விட்டுக் கொடுத்தார்.
"எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுங்கள்' என்று எரிவாயு நிறுவனங்கள் நாடெங்கிலும் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகின்றன. அதனைத் தொடர்ந்து, சமுதாயத்தில் வசதி படைத்த பலரும் இந்த மானியத்தை விட்டுக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், விஜயவாடா மாவட்டத்தில் ராயன்னபாடு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எரிவாயு உருளைக்கான மானியத்தை விட்டுக் கொடுப்பதற்கான கடிதத்தை, விநியோக நிறுவன அதிகாரிகளிடம், ஆந்திர அமைச்சர் தேவிநேனி உமாமகேஸ்வர ராவ் ஒப்படைத்தார்.
Advertisement
Advertisement
முன்னதாக, எரிவாயு உருளைக்கான மானியத்தை பணக்காரர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.