FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு:புதுவையில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

புதுவையில் சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

புதுவையில் சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுவையில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் தங்களுக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப குழு அமைத்து தேர்வு நடத்தி நிரப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி புதுவை அரசின் உயர்கல்வி சேர்க்கை ஆணையம், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் தலைமையில் குழு அமைத்து தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கைப் பட்டியலை வழங்கி வருகிறது.

Advertisement

Advertisement

இதற்கான தனி இணையதளத்தில் தேர்ச்சிப் பட்டியலை வெளியிட்டு சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில், இந்தப் பட்டியலில் திருத்தம் செய்து மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து, மாணவர்- பெற்றோர் நலச் சங்கத் தலைவர் பாலா, சேர்க்கை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியின் தந்தை கண்ணபிரான், மகாபலிபுரத்தைச் சேர்ந்த மாணவியின் உறவினர் பிரசன்னா உள்ளிட்டோர் புகார் தெரிவித்திருந்தனர்.

போலியான இணையதளத் தேர்ச்சிப் பட்டியலைக் காட்டி, மாணவர் சேர்க்கை மறுக்கப்பட்டதாக அவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பட்டியலை ஆய்வு செய்த உயர்கல்வி சேர்க்கை ஆணையத்தின் தலைவர் ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன், "மாணவர் தேர்வுப் பட்டியலை வெளியிடும் இணையதளத்தில் திருத்தம் செய்து முறைகேடு நடந்திருப்பதால், அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று புதுவை காவல் துறைத் தலைவரிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் வெங்கடசாமி தலைமையிலான புதுவை சிபிசிஐடி போலீஸார், இதுதொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments