FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

லண்டனில் அம்பேத்கர் வாழ்ந்த வீடு மகாராஷ்டிர அரசிடம் ஒப்படைப்பு

லண்டனில் கடந்த 1921- 1922-ஆம் ஆண்டு வரையில் கல்வி பயின்றபோது அம்பேத்கர் வாழ்ந்த வீட்டின் உரிமை மகாராஷ்டிர அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

லண்டனில் கடந்த 1921- 922-ஆம் ஆண்டு வரையில் கல்வி பயின்றபோது அம்பேத்கர் வாழ்ந்த வீட்டின் உரிமை மகாராஷ்டிர அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

3 மாடிகளைக் கொண்ட அந்த வீட்டின் சாவி மற்றும் ஆவணங்கள் மகாராஷ்டிர முதன்மைச் செயலர் எம்.சி. சிங்கிடம் அளிக்கப்பட்டது.

லண்டனில் படித்த போது அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை இந்தியா வாங்குவது  தொடர்பாக அந்த வீட்டின் தற்போதைய உரிமையாளருக்கும், மகாராஷ்டிர மாநில அரசுக்கும் இடையேயான ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்தானது.

Advertisement

Advertisement

இரண்டாயிரத்து ஐம்பது சதுர அடியில் 3 தளங்களைக் கொண்ட அந்த வீடு சர்வதேச நினைவுச் சின்னமாக மாற்றப்படவுள்ளது. மேலும், அங்கு இந்தியக் கலாசார மையமும் அமையவிருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.31 கோடி ரூபாய் கொடுத்து மகாராஷ்டிர அரசு அந்த வீட்டை வாங்கியது.

அந்த வீட்டின் முகப்பில், 'சமூக நீதிக்கான இந்தியப் போராளி அம்பேத்கர் இங்கு வாழ்ந்தார்' என்ற கல்வெட்டு ஏற்கெனவே இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments