மோடி-இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே சந்திப்பு!
அரசு முறை சுற்றுப்பயணமாக முதன்முறையாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் தெரேசா மேக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாரம்பரிய வரவேற்பளித்தார்.
புதுதில்லி: அரசு முறை சுற்றுப்பயணமாக முதன்முறையாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் தெரேசா மேக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாரம்பரிய வரவேற்பளித்தார்.
இரு தரப்பு பேச்சுவார்தை நடத்துவதற்காக இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே அரசு முறை சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். புதுதில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் தங்கியுள்ள அவரை இன்று இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பாரம்பரிய வரவேற்பளித்தார்.
இது தொடர்பான தகவலையும், இரண்டு தலைவர்களும் சந்தித்துக் கொள்ளும் புகைப்படத்தையும், வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.