அமெரிக்க புதிய அதிபர் 100 நாட்களுக்குள் மோடியை சந்திக்க வேண்டும்: கொள்கை அமைப்பு ஆரூடம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் நபர், நூறு நாட்களுக்குள் இந்தியப் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று அமெரிக்க முன்னணி கொள்கை அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.
இந்தியாஅமெரிக்க புதிய அதிபர் 100 நாட்களுக்குள் மோடியை சந்திக்க வேண்டும்: கொள்கை அமைப்பு ஆரூடம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் நபர், நூறு நாட்களுக்குள் இந்தியப் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று அமெரிக்க முன்னணி கொள்கை அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் நபர், நூறு நாட்களுக்குள் இந்தியப் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று அமெரிக்க முன்னணி கொள்கை அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் இன்னும் 3 மாதங்களில் முடிவடைய உள்ளது. எனவே, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது.
அதிபர் தேர்தலில் டிரம்பும், ஹலாரி கிளிண்டனும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
இந்த நிலையில், புள்ளியியல் மற்றும் சர்வதேச ஆய்வு மையம் எனப்படும் சிஎஸ்ஐஎஸ் அமைப்பு சார்பில் ஒரு பரிந்துரை வைக்கப்பட்டுள்ளது. அதில், அமெரிக்காவின் புதிய அதிபர், தான் பதவியேற்று 100 நாட்களுக்குள் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும். இரு நாட்டு உறவையும் பலப்படுத்திக் கொள்ள இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக அமையும்.
மேலும், இந்தியா - அமெரிக்க இடையே பாதுகாப்பு உறவை பலப்டுத்தும் வகையில் முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.