மத்திய அமைச்சர் கார் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்!
கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ கார் மீது மர்ம நபர்கள் கல் வீசிய தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாமத்திய அமைச்சர் கார் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்!
கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ கார் மீது மர்ம நபர்கள் கல் வீசிய தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா: கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது மர்ம நபர்கள் கல் வீசிய தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் பாபுல் சுப்ரியோ. பாஜகவைச் சேர்ந்த இவர் மத்திய அமைச்சர் ஆவார். அவர் இன்று மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் நகரில் நடைபெற்ற பாஜக பொதுகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார்.அப்பொழுதுவரது காரை வழிமறித்த மர்ம நபர்கள் திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அவரது கார் முற்றிலும் சேதம் அடைந்தது. அவர் மீதும் ஒரு கல் வந்து விழுந்தது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக பாபுல் சுப்ரியோ குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.