முகப்பு
இந்தியா

தில்லியில் 'ஆம் ஆத்மி' கட்சி எம்.எல் ஏ கைது!

தில்லி எய்ம்ஸ்  மருத்துவமனை சுற்றுவேலியை உடைத்து, காவலாளிகளை தாக்கிய வழக்கில்  'ஆம் ஆத்மி' கட்சி எம்.எல்.ஏ சோம்நாத் பாரதி கைது செய்யப்பட்டார். 

Updated On : 22 செப்டம்பர், 2016 at 4:22 PM
பகிர்:

தில்லி எய்ம்ஸ்  மருத்துவமனை சுற்றுவேலியை உடைத்து, காவலாளிகளை தாக்கிய வழக்கில்  'ஆம் ஆத்மி' கட்சி எம்.எல்.ஏ சோம்நாத் பாரதி கைது செய்யப்பட்டார். 

கடந்த ஒன்பதாம் தேதியன்று தில்லி  எய்ம்ஸ்  மருத்துவமனையைச் சுற்றி அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு இருந்த  'ஆம் ஆத்மி' கட்சி எம்.எல்.ஏ சோம்நாத் பாரதி, எர்த் மூவர் வாகனம் மூலம் மருத்துமனை சுற்றுச்சுவரிலிருந்த வேலியை  தகர்த்ததாகவும், தடுக்க முயன்ற மருத்துவமனை காவலாளிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த வழக்கில் தில்லி காவல்துறையால் இன்று காலை சோம்நாத் பாரதி கைது செய்யப்பட்டார்.  இது தொடர்பான தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் , 'கவுதம் நகர் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, நான் இப்போது ஹவுஸ் காஸ் காவல்  நிலையத்தில் இருக்கிறேன்' என்று தகவல் பகிர்ந்து கொண்டுள்ளார்.        

Advertisement

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுகளை மறுத்துள்ள  சோம்நாத் பாரதி தில்லி அரசின் பொதுப்பணித்துறை சார்பாக நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் நிகழ்வில் கலந்து கொள்ளவே தான் அங்கு சென்றதாகவும், எந்த விதமான கைகலப்பும் அங்கு நடைபெற வில்லை என்று மறுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.