முகப்பு
இந்தியா

6 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 7-ஆம் தேதி பாஜகவில் இணைகிறார்கள்

திரிபுரா மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 6 எம்எல்ஏக்கள், வரும் 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) பாஜகவில் முறைப்படி இணைகிறார்கள்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

திரிபுரா மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 6 எம்எல்ஏக்கள், வரும் 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) பாஜகவில் முறைப்படி இணைகிறார்கள்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இவர்கள் நீக்கப்பட்டனர்.
அவர்கள் 6 பேரும், தில்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுவார்கள் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்டர் ஷோம் , அகர்தலாவில் வியாழக்கிழமை கூறினார். இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:
6 எம்எல்ஏக்களையும் பாஜகவில் இணைப்பது குறித்து மேலிடத் தலைவர்களுடன் பல முறை விவாதித்த பிறகு இறுதி செய்யப்பட்டது. இவர்கள் 6 பேரும், தங்களது ஆதரவாளர்களுடன் அகர்தலாவில் திங்கள்கிழமை நடைபெறும் பொதுக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலர் ராம் மாதவ், தேசிய ஜனயநாயகக் கூட்டணியின் வடகிழக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிமந்த விஸ்வ சர்மா, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்கள் என்றார் அவர்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுதீப் ராய் பர்மன் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸில் இருந்து வெளியேறி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்தனர். இதனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →