முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் பட்டாசுகளுக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறுவன் வழக்கு!

நாடு முழுவதும் பட்டாசுகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறுவன் ஒருவன் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.   

Updated On : 1 டிசம்பர், 2017 at 1:06 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:45 PM

புதுதில்லி: நாடு முழுவதும் பட்டாசுகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறுவன் ஒருவன் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.   

உச்ச நீதிமன்றத்தில் அர்ஜுன் கோபால் என்னும் சிறுவன் அவனது தந்தையும் வழக்கறிஞருமான கோபால் ஷங்கரநாராயணன் மூலம் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளான். அதில் நாடு முழுவதும் பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் வெடித்தல் ஆகியவற்றுக்கு தடை கோரியுளான். இதில் விவசாய நிலங்களில் சுள்ளி உள்ளிட்ட விவசாய உபரிப்பொருட்களை எரிப்பதற்கான தடையும் அடங்கும்.

இந்த வழக்கானது நீதிபதிகள் சிக்ரி மற்றும் அசோக் பூஷன் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

காற்று மாசு ஏற்படுவதால் பட்டாசுகளைத் தடை செய்யக் கோரும் இதே போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முன்பும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.