இந்தியா

புல்வாமா தாக்குலுக்குப் பிறகு  பாகிஸ்தானில் தீவிரவாதத் தலைவர்களின் 'சீக்ரட் மீட்டிங்' 

புல்வாமா தாக்குலுக்குப் பிறகு  பாகிஸ்தானில் இரண்டு தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களிடையே  'சீக்ரட் மீட்டிங்' நடைபெற்ற தகவல் வெளியாகியுள்ளது.   

ENS

புது தில்லி: புல்வாமா தாக்குலுக்குப் பிறகு  பாகிஸ்தானில் இரண்டு தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களிடையே  'சீக்ரட் மீட்டிங்' நடைபெற்ற தகவல் வெளியாகியுள்ளது.   

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதியன்று சி.ஆர்.பி.எப் வீரர்களின் வாகனங்களின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 40 வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவமானது இந்திய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த கொடூர தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டு நடத்தியது தெரிய வந்தது. தற்போது தேசிய விசாரணை ஆணையம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் புல்வாமா தாக்குலுக்குப் பிறகு  பாகிஸ்தானில் இரண்டு தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களிடையே  'சீக்ரட் மீட்டிங்' நடைபெற்ற தகவல் வெளியாகியுள்ளது.   

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் மற்றும் மற்றொரு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவரான சையத் சலாஹுதீன் இருவரும் இஸ்லாமாபாத் அருகே ரகசிய இடத்தில சந்தித்து பேசிய தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதல் சம்பவம் நடந்து முடிந்த இரண்டு நாட்களிலேயே 16 மற்றும் 21 ஆகிய இரு தேதிகளில் இவர்களது சந்திப் பு  நடந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது இரண்டு அமைப்புகளின் வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் செயல்பாடுகளை தீவிரப்படுத்துதல் தொடர்பாக அமைந்திருக்கலாம் என்று, பாதுகாப்பு துறை வல்லுநரான வர்மா தெரிவித்துள்ளார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT