இந்தியா

கர்நாடக விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லை: கைவிரித்த அமைச்சர் சிவகுமார் 

DIN

பெங்களூரு: கர்நாடக விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லை எனவே தமிழகத்திற்கு நீர் வழங்க இயலாது என்று  கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

தில்லியில் சமீபத்தில் கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டமானது கர்நாடகம் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய நீரை வழங்குவது குறித்து உத்தர வு பிறப்பித்திருந்தது.

அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. குறிப்பாக உப்பள்ளி, தார்வார், பீதர், பல்லாரி, கொப்பல் உள்ளிட்ட வடகர்நாடக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடக விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லை எனவே தமிழகத்திற்கு நீர் வழங்க இயலாது என்று  கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று பெங்களூவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

கர்நாடகாவின் நீராதார நிலை குறித்து, காவிரி ஆணையத்திடம் தெளிவாகத் தெரிவித்து விட்டோம்.  மழை சரியாகப்  பொழியவில்லை என்றால் கர்நாடகாவின் நிலை மேலும் மோசமடையும். தற்போது கர்நாடக விவசாயிகளுக்கே, தண்ணீர் இல்லை என்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

SCROLL FOR NEXT