இந்தியா

ஆந்திர முதல்வராக பதவியேற்ற ஜெகன்மோகனுக்கு ராகுல் காந்தி வாழ்த்து 

ஆந்திர முதல்வராக வியாழனன்று பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

புது தில்லி: ஆந்திர முதல்வராக வியாழனன்று பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து 176 இடங்களைக் கொண்ட ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில்  151 இடங்களில் வென்று ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.

இதையடுத்து, ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி வியாழன் காலை விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் ஆந்திர முதல்வராக வியாழனன்று பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஆந்திர முதல்வராக பதவிஏற்றுக் கொண்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

அவருக்கும், அவரது அமைச்சர்களுக்கும் மற்றும் ஆந்திர மாநிலம் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரம்

ஒரே பெயரில் 2 கடவுச்சீட்டு; ஒருவா் கைது

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காவலா் பலி

ஆற்றில் மூழ்கி சகோதரா் இருவா் உயிரிழப்பு

அன்புக் கரங்கள் திட்டத்தில் 98 குழந்தைகளக்கு நிதி

SCROLL FOR NEXT