முகப்பு
இந்தியா

சிபிஐக்கு எதிரான முன்ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றார் சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐக்கு எதிராக தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சிதம்பரம் தரப்பு இன்று திரும்பப் பெற்றது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:00 AM
பகிர்:


புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐக்கு எதிராக தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சிதம்பரம் தரப்பு இன்று திரும்பப் பெற்றது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தரப்பினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

ஆனால் அதன் மீது விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வருவதற்கு முன்பே சிதம்பரம் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிபிஐக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில், சிபிஐ காவல் முடிந்து இன்று நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அதற்கு முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மேல்முறையீட்டு மனு திரும்பப் பெறப்பட்டது.

முன்னதாக, இதே வழக்கில் அமலாக்கத் துறைக்கு எதிராக சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.