FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவராக மணீஷ் திவாரி தேர்வாக வாய்ப்பு

காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவராக மணீஷ் திவாரி நாளை தேர்வாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 31 மே 2019, 1:18 pm IST
பகிர்:

காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவராக மணீஷ் திவாரி நாளை தேர்வாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 90 இடங்களையே கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியால் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் காந்தி முன்வந்தார்.

ஆனால், அவரது முடிவை காங்கிரஸ் செயற்குழு நிராகரித்துவிட்டது. மேலும், கட்சியை மறுசீரமைப்பதற்கான அதிகாரத்தை, ராகுலுக்கு செயற்குழு வழங்கியது. இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் எம்பிக்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

அதில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவராக மணீஷ் திவாரி தேர்வாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments