இந்தியா

மருத்துவ சேவைகள், வங்கி சேவைகள் வழக்கம்போல இயங்கும்: மத்திய அரசு அறிவிப்பு

DIN

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சேவைகள், வங்கி சேவைகள் வழக்கம்போல இயங்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா பரவல் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பின் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில், மருத்துவமனைகள், நர்ஸிங் ஹோம்ஸ், கிளினிக், மருந்தகங்கள் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் தொடர்பான அனைத்தும் வழக்கம்போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ பரிசோதனை மையங்கள், கரோனா தொடர்பாக ஆராய்ச்சி செய்யும் மருத்துவக் கூடங்கள், மருத்துவ சேவை தொடர்பான கட்டுமானப் பணிகளுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் கொண்டு செல்வதற்கு தடையில்லை.

அதேபோன்று வங்கிகள், ஏடிஎம், நிதி சேவை நிறுவனங்கள், வங்கி சேவையுடன் தொடர்புடைய ஐடி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும்.

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் செல்லலாம். ஆயில், சிலிண்டர், பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் வாகனங்கள் செல்ல தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது. 

அஞ்சல் சேவைகள், மின் சேவைகள், தகவல் தொடர்பு சேவைகள் தொடர்ந்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் சமூட இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT