குடியரசுத் தலைவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு
தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார்.
தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார்.
முன்னதாக, மூன்று நாள் அரசுப் பயணமாக தில்லி சென்றுள்ள தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், புதன்கிழமை பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வியாழக்கிழமை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்துப் பேசிய ஆளுநர், இன்று (வெள்ளிக்கிழமை) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் சந்தித்து பேசினார்.