தில்லியில் கனமழை: அபாய கட்டத்தில் யமுனை ஆற்றின் நீர் மட்டம்
தில்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், யமுனை நதி அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
தில்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், யமுனை நதி அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்திருந்தது. இந்நிலையில், தில்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
இதன் காரணமாக, நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காலை பயணம் செய்த மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழையின் விளைவாக, யமுனை நதியின் நீர் மட்டம் அபாய கட்டத்தை நெருங்கியுள்ளது.
இதையும் படிக்க | பெகாஸஸ் விவகாரத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணை
இன்று காலை 9 மணி நிலவரப்படி, யமுனை ஆற்றின் நீர் மட்டம் 205.30ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை காலை, நீர் மட்டம் குறைந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையால் அது மீண்டும் அதிகரித்தது. இதுகுறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என வடதில்லி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் புகார் அளித்துள்ளனர்.