உத்தரப் பிரதேசம் : கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய 600 கிராமங்கள்
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது
இந்தியாஉத்தரப் பிரதேசம் : கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய 600 கிராமங்கள்
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மழை பதிவாகியிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கனமழையால் கங்கா, யமுனா நதிகளில் உருவான வெள்ளப் பெருக்கினால் அதை ஒட்டியிருந்த மாவட்டங்களில் 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியிருக்கிறது.
இதையும் படிக்க | பெட்ரோல் மீதான வரி குறைப்பு: தமிழக பட்ஜெட்டில் தகவல்
இந்நிலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ததோடு நிவாரணப் பணியை அதிகப்படுத்தவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை தேசிய பேரிடர் மீட்புப்படை மூலம் வழங்கி வந்தார்கள் தற்போது இந்திய ராணுவமும் மீட்புப்படையுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.