இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 97.52 சதவீதம் பேர் குணம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,178 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 440 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,178 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 440 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரம் நேற்று ஒரே நாளில் சிகிச்சையில் இருந்த 37,169 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து இதுவரை நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3,22,85,857 பேரில் 3,12,85,923 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.
இதையும் படிக்க | ஈரான் : கடந்த 24 மணி நேரத்தில் 50,228 பேருக்கு கரோனா பாதிப்பு
இதனால் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 97.52 சதவீதம் பேர் முற்றிலும் நோயின் தாக்கத்தில் இருந்து மீண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கடந்த வருடத்திலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) வரை கரோனாவால் 4,32,519 பேர் இறந்திருப்பதாகவும் தற்போது 3,67,415 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நோய்த் தொற்றுகளை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் மிக வேகமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 56.6 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.