கோப்புப் படம் 
இந்தியா

தில்லி - அயோத்தி இடையே புல்லட் ரயில்!

உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத்துறை மேம்படுத்தும் விதமாக அயோத்தி-தில்லி இடையே அதிவேக புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது.

DIN

உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத்துறை மேம்படுத்தும் விதமாக அயோத்தி-தில்லி இடையே அதிவேக புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தில்லி மற்றும் அயோத்தி இடையேயான புல்லட் ரயில் சேவைக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புல்லட் ரயிலின் விரிவான திட்டத்தின்படி, தில்லி மற்றும் வாரணாசி இடையே ஆக்ரா-லக்னெள-பிரயாக்ராஜ் வழியாக மொத்தம் 941.5 கி.மீ. பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த புல்லட் ரயில் திட்டமானது மொத்தம் 670 கி.மீ தூரத்தை மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் அடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. லக்னெள -கோராக்பூர் புறவழிச்சாலையில் உள்ள ஸ்ரீ ராம் சந்திர விமான நிலையத்திற்கான நிலம் அடையாளம் காணப்பட்டு இறுதி செய்யப்பட்ட நிலையில் இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டவுடன் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 7 முதல் 8 ஆண்டுகளில் பயன்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT