இந்தியா

சிலிண்டர் வாங்க பணமில்லை; பெண்களின் வலி பற்றி எப்போது பேசுவோம்? - பிரியங்கா காந்தி கேள்வி

DIN

சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு குறித்து மத்திய அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சமையல் எரிவாயு உருளை விலைகள் தொடர்ந்து உயர்கின்றன. சிலிண்டரை நிரப்ப பணம் இல்லை. கரோனா பொதுமுடக்கத்தால் வணிகம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டு பெண்களின் துன்பம் மற்றும் அவர்களின் வலியைப் பற்றி எப்போது பேசுவோம்? என்று கேள்வி எழுப்பியதுடன் நாட்டில் பணவீக்கத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

மேலும், சமையல் எரிவாயு வவிலை குறித்து பெண் ஒருவர் பேசும் விடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். 

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 11 ம் தேதி, 'பணவீக்கம்' தொடர்பாக பிரியங்கா காந்தி, மத்திய அரசை கடுமையாக சாடினார். மேலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குமாறும் அவர் மத்திய அரசை வலியுறுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT