இந்தியா

உத்தரப் பிரதேசம் : புதிதாக 21 பேருக்கு கரோனா

DIN

இந்தியாவில் கரோனா தொற்று கட்டுக்குள் இருக்கும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனுடன் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்னிக்கை 341 ஆகும்.  தினசரி தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் சதவீதம் 0.01 ஆகவும் நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் சதவீதம் 98.6 ஆகவும் இருக்கிறது.

மேலும் இதுவரை 6.68 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7.41 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நோய் கட்டுப்பாடுகள் குறித்து பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் 'பாதுகாப்பு நடவடிக்கைகளால் கரோனா தொற்று குறைந்து வந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசங்களை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் ' எனத் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக மாநிலத்தில் 18 மாவட்டங்கள் கரோனா இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT