முகப்பு
இந்தியா

திரிணமூலில் இணைந்த பாஜக பிரமுகர்கள்

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ. உள்பட இருவர்  திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
திரிணமூலில் இணைந்த பாஜக பிரமுகர்கள்
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ. உள்பட இருவர்  திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

நேற்று விஷ்ணுபூா் தொகுதி பாஜக எம்எல்ஏ தன்மய் கோஷ், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், இன்று இருவர் இணைந்துள்ளனர்.

கடந்த மாா்ச்-ஏப்ரலில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் ஆளும் கட்சியாக இருந்த திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே பலத்த போட்டி இருந்தது. 

அப்போது, திரிணமூல் காங்கிரஸில் இருந்து பல தலைவா்கள் பாஜகவுக்குத் தாவினா். எனினும், தோ்தலில் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

இதையடுத்து, பாஜகவுக்கு தாவிய பலா் மீண்டும் திரிணமூல் காங்கிரஸுக்குத் திரும்பி வருகின்றனா்.  அந்தவகையில் பாஜக எம்.எல்.ஏ. பிஸ்வாஜித் தாஸ், பாஜக கவுன்சிலர் மனோதோஷ் நாத் ஆகியோர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →