நாட்டில் கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.
கரோனா வைரஸின் மரபணு வரிசைமுறை சோதனையில், கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை கரோனா வைரஸின் மரபணு வரிசைமுறை சோதனையை மேற்கொள்ளும் 37 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது முற்றிலும் அவசியம். புதிய வகை கரோனாவின் செயல்பாடு குறித்த அறிதல் தேவைப்படுகிறது என்று ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்படுகின்றன என்று மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக, தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா, இதுவரை ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்பட 29 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் 373 பேர் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.