திறப்பு விழா அன்றேவா? பாஜக எம்எல்ஏ தேங்காய் உடைக்க.. சிதறியது சாலை (கோப்புப் படம்) 
இந்தியா

திறப்பு விழா அன்றேவா? பாஜக எம்எல்ஏ தேங்காய் உடைக்க.. சிதறியது சாலை

புதிதாகப் போடப்பட்ட சாலையை திறந்து வைக்கும் விழாவில், பாஜக எம்எல்ஏ சாலையில் தேங்காயை உடைக்க, அது உடையவில்லை. ஆனால், புதிதாகப் போடப்பட்ட சாலைதான் சிதறி ஓடியது.

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நூர் பகுதியில், புதிதாகப் போடப்பட்ட சாலையை திறந்து வைக்கும் விழாவில், பாஜக எம்எல்ஏ சாலையில் தேங்காயை உடைக்க, அது உடையவில்லை. ஆனால், புதிதாகப் போடப்பட்ட சாலைதான் சிதறி ஓடியது.

டிசம்பர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தால், மிக மோசமான தரத்துடன் தார் சாலை போடப்பட்டது வெட்டவெளிச்சமானது, திறப்பு விழாவுக்கு வந்த பாஜக எம்எல்ஏ சுசி சௌத்ரி, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டார்.

பிறகு, தார்ச் சாலையின் சிதறிய பாகங்களை, ஒரு பையில் போட்டு, சோதனைக்காகக் கொண்டு சென்றுள்ளார் சுசி சௌத்ரி.

இது குறித்து தான் மாவட்ட நீதிபதியிடம் பேசியிருப்பதாகவும், சாலை போதுமான தரத்துடன் அமையவில்லை என்று புகார் கூறியிருப்பதாகவும், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, தார் சாலையின் தரம் கண்டறிவதற்கான சோதனையும் நடைபெறுவதாகக் கூறியுள்ளார்.

இங்கு மாநிலத் தேர்தல் நெருங்குகிறது. அதனால், அவசர அவசரமாக சாலைகள் போடப்பட்டு, துவக்க விழாவும் நடைபெற்றது. நல்லவேளை, தேங்காய் சாலையில் பட்டு, யார் தலையிலும் விழாவில்லை என்கிறார்கள் சிரித்தபடி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு: சாலையில் 6 அடி உயரத்துக்கு 38 கி.மீ. படர்ந்த பனி! வெளியேற முடியாமல் தவித்த 40 வீரர்கள் பத்திரமாக மீட்பு!

புதிய ரெனால்ட் டஸ்டர் கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிரிட்டிஷ் ஆட்சியை விட மோசமானது சமத்துவமில்லாத இந்தியா: காங்கிரஸ்

டி20 உலகக் கோப்பையை வெல்ல மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதிக வாய்ப்பு: பிராவோ

ஓ ரோமியோ படத்தில் திஷா பதானியின் கவர்ச்சி நடனம்!

SCROLL FOR NEXT