முகப்பு
இந்தியா

அலையின் ஆரம்பமா? மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் 1000-ஐ எட்டியது

சுமார் ஒரு மாத காலத்துக்குப் பிறகு மகாராஷ்டிரத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 23 டிசம்பர், 2021 at 3:35 PM
அலையின் ஆரம்பமா? மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் 1000-ஐ எட்டியது
பகிர்:


மும்பை: சுமார் ஒரு மாத காலத்துக்குப் பிறகு மகாராஷ்டிரத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் மட்டும் 480 பேர் உள்பட மகாராஷ்டிரத்தில் நேற்று ஒரே நாளில் 1,201 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கடந்த செவ்வாயன்று 825 பேருக்கு கரோனா உறுதியாகியிருந்தது.

இதற்கு முன்பு, கடைசியாக மகாராஷ்டிரத்தில் கடந்த நவம்பர் 17ஆம் தேதிதான் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியானது. அன்றைய தினம் அந்த மாநிலத்தில் 1,003 பேருக்கு கரோனா உறுதியாகியிருந்தது. சுமார் 35 நாள்களுக்குப் பிறகு இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Advertisement

நல்வாய்ப்பாக, மகாராஷ்டிரத்தில் கரோனா பலி எண்ணிக்கை மெல்ல குறைந்து வருகிறது. நேற்று கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. மும்பையில் கரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை.

மாஹிம் பகுதியில் கரோனா நோயாளிகள் கடந்த சில வாரங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது அது 14 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரு பக்கம் பாதிப்பு உயர்ந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய கரோனா அதிகரிப்புக்கு ஒமைக்ரான்தான் காரணமாக என்று தெரியவில்லை. எனினும், இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு வெளிநாட்டிலிருந்து திரும்பும் பயணிகளுக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.