முகப்பு
இந்தியா

மும்பையில் ஒன்றரை வயது குழந்தைக்கு ஒமைக்ரான்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஒன்றரை வயது குழந்தைக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஒன்றரை வயது குழந்தைக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. லண்டனிலிருந்து வந்த குடும்பத்திற்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஒன்றரை வயது குழந்தைக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாற்றமடைந்த ஒமைக்ரான் வகை கரோனா கண்டறியப்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் லண்டனிலிருந்து மும்பை வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அவர்களில் இருவர் ஏற்கெனவே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். இதில் இருவருக்கு மட்டுமே லேசான கரோனா அறிகுறி  கண்டறியப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அறிகுறிகள் இல்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் இதுவரை 167 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 72 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மும்பையில் மட்டும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 85 பேரில் 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மும்பையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 809 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →