முகப்பு
இந்தியா

தில்லி எய்ம்ஸில் குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை ஓரிரு தினங்களில் தொடக்கம்

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி பரிசோதனை ஓரிரு தினங்களில் தொடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி பரிசோதனை ஓரிரு தினங்களில் தொடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மூன்றாம் அலைக்கும் வாய்ப்புள்ளது என்று  கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி பரிசோதனைகள் தொடங்கும் நிலையில் உள்ளன. பாட்னாவின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்)  குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி பரிசோதனையை இன்று தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 12-18 வயதினருக்கு சோதனைகளைத் தொடங்கியுள்ளது. இந்த சோதனைக்குப் பின்னர் 6-12, 2-6 வயதினருக்கு சோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி பரிசோதனை ஓரிரு தினங்களில் தொடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்தி குழந்தைகளிடம் பரிசோதனை ஒரு சில தினங்களில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, 

முன்னதாக பாரத் பயோடெக்கின் கரோனா தடுப்பூசியான கோவக்சினை குழந்தைகளுக்கு பரிசோதிக்க கடந்த மே 11 ஆம் தேதி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →