முகப்பு
இந்தியா

இந்தியாவில் மேலும் 17,921 பேருக்கு கரோனா: 133 பேர் பலி

இந்தியாவில் இன்று மேலும் 17,921 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
இந்தியாவில் மேலும் 17,921 பேருக்கு கரோனா: 133 பேர் பலி
பகிர்:

இந்தியாவில் இன்று மேலும் 17,921 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 17,921 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,12,62,707 ஆக அதிகரித்துள்ளது. 

நோய்த் தொற்றிலிருந்து இன்று 20,652 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,09,20,046 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,84,598 போ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனா பாதிப்பால் மேலும் 133 போ் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனா தொற்றுக்கு நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,58,063 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,43,67,906 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதுவரை 22,34,79,877 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 7,63,081 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →