இந்தியா

உத்தரகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்

DIN

உத்தரகண்ட் மாநில அமைச்சரவையில் புதிதாக 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

உத்தரகண்ட் மாநில பாஜகவில் எழுந்த அதிருப்தி காரணமாக கட்சியின் மத்திய தலைமையின் உத்தரவின் பேரில் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் (60) தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். 

இந்நிலையில் புதிய முதல்வராக  பாஜக எம்.பி. தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதன்கிழமை டேராடூனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கத்தை முதல்வர் தீரத் சிங் ராவத் மேற்கொண்டுள்ளார்.

ரேகா ஆர்யா, தன் சிங் ராவத், சுவாமி யதிஸ்வரானந்த், சத்பால் மகாராஜ், பன்சிதர் பகத், ஹரக் சிங் ராவத், பிஷன் சிங் சுபால், யஷ்பால் ஆர்யா, அரவிந்த் பாண்டே, கணேஷ் ஜோஷி மற்றும் சுபோத் யூனியல் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை ஆளுநர் ராணி மெளரியா பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

SCROLL FOR NEXT