ராகுல் காந்தி 
இந்தியா

‘ஆக்கிரமிப்பு எனும் உண்மையை ஏற்கத்தான் வேண்டும்’: சீனா உடனான எல்லை பிரச்னையில் ராகுல் விமர்சனம்

எல்லைப் பகுதியில் சீனா ஆக்கிரமித்துள்ள உண்மையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

DIN

எல்லைப் பகுதியில் சீனா ஆக்கிரமித்துள்ள உண்மையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா இடையேயான லடாக் எல்லைப் பிரச்னை தீர்க்கப்படாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. எல்லைப் பிரச்னையை சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட பல கட்டப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறாத நிலையில் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற புதிய பொருளாதார மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியா - சீனா இடையேயான உறவானது இப்போது மோசமான காலகட்டமாக உள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, “சீனா உடனான எலலைப் பிரச்னையில் சீன ஆக்கிரமிப்பு எனும் உண்மையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு இரு நாடுகளிடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், அடுத்தகட்டமாக இரு தரப்பு ராணுவ அதிகாரிகளிடையேயான 14-ஆம் சுற்று பேச்சுவாா்த்தை விரைவில் நடத்தவும் இரு நாடுகளும் கடந்த வியாழக்கிழமை ஒப்புக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பளிங்கு சிலை... அமைரா தஸ்தூர்!

அரசமைப்புச் சட்டப் பதிப்புகளை 9 மொழிகளில் வெளியிட்டார் குடியரசுத் தலைவர்!

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

SCROLL FOR NEXT