நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியது!
நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியுள்ளது.
நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 73,76,846 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 90,51,75,348 (இன்று காலை 7 மணி வரை) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 97.87%. தற்போது 2,70,557 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 36,64,19,042 இரண்டாம் தவணை - 8,75,36,699 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 16,09,82,138 இரண்டாம் தவணை - 7,83,06,698 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,21,47,774 இரண்டாம் தவணை - 5,70,30,190 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,73,728 இரண்டாம் தவணை - 89,27,894 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,55,078 இரண்டாம் தவணை - 1,50,96,107 |
| மொத்தம் | 90,51,75,348 |