நாகாலாந்து : ரூ.29 கோடி மதிப்புள்ள தங்கம், போதைப் பொருள்கள் பறிமுதல் 
இந்தியா

நாகாலாந்து : ரூ.29 கோடி மதிப்புள்ள தங்கம், போதைப் பொருள்கள் பறிமுதல்

நாகாலாந்து மாநிலத்தில் ரூ.29 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் போதைப் பொருளை காவல்துறையினர் கடந்த அக்-4 ஆம் தேதி பறிமுதல் செய்தனர்.

DIN

நாகாலாந்து மாநிலத்தில் ரூ.29 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் போதைப் பொருளை காவல்துறையினர் கடந்த அக்-4 ஆம் தேதி பறிமுதல் செய்தனர்.

நாகாலாந்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் விதமாக கடந்த அக்-1,2,3 ஆம் தேதிகளில் கோஹிமா மாவட்ட எல்லையான குசாமாவில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் 48 கிலோ எடையுள்ள 290 தங்கக் கட்டிகள் மற்றும்  ஹெராயின் போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மாநில காவல்துறைத் தலைவர் சந்தீப் எம் தாம்கெட்ஜ் , ‘ கடந்த சில நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்ட போது ஞாயிற்றுக்கிழமை(அக்-3) குசாமா சோதனைச் சாவடியில் காரின் கியர் பகுதியில் வைத்து கடத்திவரப்பட்ட 48 கிலோ எடையுள்ள தங்கத்தையும் , போதைப்பொருளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்’ எனத் தெரிவித்தார்.

கடத்திவரப்பட்ட 48 கிலோ தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.22.78 கோடி என்றும் 80 சோப் கட்டிகளாக கொண்டுவரப்பட்ட ஹெராயின் மற்றும் ஓபியம் போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.6.50 கோடி என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கடத்தலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சௌரவ் மிஸ்ரா(35) மற்றும் பவன் குமார்(45) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

SCROLL FOR NEXT