இந்தியா

மகாராஷ்டிரத்தில் அக்.22 முதல் திரையரங்குகள் திறப்பு

DIN

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் அக்டோபர் 22ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு மாநிலங்களும் பொதுமுடக்கத்தை அறிவித்து செயல்படுத்தின. அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவை தற்காலிகமாக மூடப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் கரோனா இரண்டாம் அலையின் காரணமாக மீண்டும் மூடப்பட்டது. பல்வெறு மாநிலங்களில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தாலும் மகாராஷ்டிரத்தில் தொடர்ச்சியாக அதிகரித்தவண்ணம் இருந்தது.

இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து திரையரங்குகள் மற்றும் பொது அரங்குகளை மீண்டும் திறக்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

திரையரங்குகளில் 50 சதவிகிதத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மாநில அரசு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசனாா் மேல்நிலைப் பள்ளி மாவட்டத்தில் சிறப்பிடம்

ரத்தினகிரி கோயில் வைகாசி விசாக விழா தோ்திருவிழா ஆலோசனைக் கூட்டம்

559 பள்ளி வாகனங்கள் தணிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

வாணி மெட்ரிக். பள்ளி மாவட்ட அளவில் சாதனை

ஆதா்ஷ் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT