இந்தியா

பள்ளிகள் திறப்பின் நிலவரம் என்ன?:அமைச்சர் ஆலோசனை

DIN


பள்ளிகள் திறந்த பிறகு ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை மேற்கொண்டார். 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று (செப்.1) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

இதில் பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

கரோனா இரண்டாம் அலை குறைந்து வருவதன் எதிரொலியாக மாநிலங்களில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், பள்ளிகள் திறந்தபிறகு ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார். 

படிக்கதடுப்பூசி கிடைப்பதை எளிமையாக்கும் மத்திய அரசின் புதிய முயற்சி
 
மேலும், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு செப்டம்பர் இறுதிக்குள் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தி முடிக்கும் திட்டத்தையும் அவர் மேற்பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT