FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு 3 பெண் நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது கொலீஜியம் .

Updated On : 18 ஆகஸ்ட் 2021, 12:13 pm IST
பகிர்:


புதுதில்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது கொலீஜியம்.

இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) மூன்று பெண் நீதிபதிகள் உள்பட ஒன்பது நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. 

தற்போது, ​​உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளது, ஏனெனில் கடந்த ஓரிரு வருடங்களில் பல நீதிபதிகள் ஓய்வு பெற்றனர், சமீபத்தில் நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் ஓய்வு பெற்றார். 

Advertisement

Advertisement

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பி.வி. நாகரத்னா, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகிய மூன்று பெண் நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் பெண் தலைமை நீதிபதிக்கான குரல் நீண்ட காலமாகவே ஒலித்து வரும் நிலையில், கொலீஜியத்தின் பரிந்துரையை பரிசீலித்து, நீதிபதி பி.வி. நாகரத்னா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டால், அவர் 2027-இல் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை பெறுவார். 

கடந்த 2008 ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் பி.வி. நாகரத்னா. இவர் பின்னர் நிரந்தர நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். இவருக்கு இன்னும் பல ஆண்டுகள் பணிக்காலம் உள்ளதால் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆகும் வாய்ப்பு உள்ளது. இவரது தந்தை ஈ.எஸ். வெங்கட்ராமைய்யா 1989 -ஜூன் முதல் டிசம்பவர் வரை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஓய்வு  பெற்ற நீதிபதி எஸ்.ஏ. போப்டா, தனது ஓய்வின் போது உச்ச நீதிமன்றத்துக்கு பெண் நீதிபதி தலைமை ஏற்கும் காலம் வந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்ததும் குறிப்படத்தக்கது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவில் (கொலீஜியம்), உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மற்றும் நான்கு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடம் பெற்றிருப்பாா்கள். தற்போது தலைமை நீதிபதி, நீதிபதிகள் உதய் உமேஷ் லலித், ஏ.எம். கான்வில்கர், டாக்டர் தனஞ்சய ஒய் சந்திரசூட் மற்றும் எல். நாகேஸ்வர ராவ் என ஐந்து மூத்த நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments