முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 415 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 415 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.

உருமாறிய கரோனா வகையான ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. தொற்று பரவல் சூழலுக்கேற்ப ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 108 பேரும், தில்லியில் 79 பேரும், குஜராத்தில் 43 பேரும் தெலங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கேரளத்தில் 37 பேரும், தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகத்தில் 31 பேரும், ராஜஸ்தானில் 22 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர ஹரியாணா, ஒடிசா, ஆந்திரத்தில் தலா 4 பேரும், ஜம்மு-காஷ்மீர், மேற்குவங்கத்தில் தலா 3 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 2 பேரும், சண்டீகர், லடாக், உத்தரகண்டில் தலா ஒருவரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 115 பேர் ஒமைக்ரான் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →