முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணிவரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவைகள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணிவரை ஒத்திவைப்பு
பகிர்:

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவைகள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென கடந்த 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடியவுடன், பெகாஸஸ் பிரச்னை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து காலை முதலே அவை ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், மதியம் 2 மணிவரை மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாநிலங்களவையிலும் பெகாஸஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →